பல வாக்கியங்களில் காணப்படுவது போல் காற்புள்ளி பல நிறுத்தக் குறியீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்று. முற்றுப்புள்ளி போல் நிறுத்தத்தை குறிக்காமல் ஒரு இடைநிறுத்ததை குறிக்கும். வாக்கியத்தின் எந்த பகுதி முக்கியம் என்று அது எடுத்துக்காட்டும். காற்புள்ளி தவறாக பயன்படுத்தினால் படிப்பவருக்கு குழப்பத்தை மட்டும் உண்டாக்காமல் தவறான அர்த்தத்தையும் தெரிவித்துவிடும். காற்புள்ளி பயன்படுத்துவதை பற்றி சில தவறான கண்ணோட்டங்கள் என்னவென்றால்:

  • அனைத்து நீண்ட வாக்கியங்களிலும் காற்புள்ளி பயன்படுத்தவேண்டும். நீண்ட வாக்கியங்கள் காற்புள்ளி இல்லாமலும் அர்த்தம் தரும். அவ்வகை ஆன வாக்கியங்களில் காற்புள்ளி தேவை என்ற அவசியம் இல்லை. காற்புள்ளி இல்லை என்றாலும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
  • இடையில் நாம் தாமதம் உருவாக்கும் பொழுது காற்புள்ளி பயன்படுகிறது. ஒவ்வொருவரும் நிறுத்தும்பொழுது காற்புள்ளி பயன்படுத்தவேண்டும் என்பது தவறு. ஏனென்றால் நிறுத்தங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் வேறுபடும்.
  • ஒரு வாக்கியத்தில் எங்கு காற்புள்ளி வரும் என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை. இல்லை, ஒரு வாக்கியத்தில் எங்கு காற்புள்ளி வரவேண்டும் என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

காற்புள்ளி பயன்படுத்த பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பார்க்கலாம்:

விதி 1

வார்த்தைகளையும், வார்த்தை தொகுப்புகளையும் ஒரு தொடராக பிரிக்க காற்புள்ளி பயன்படுத்தவேண்டும்.

உதாரணம்:  My property goes to my wife, daughter, son-in-law, and niece.

பின்குறிப்பு: ஒரு காற்புள்ளி ‘and ‘ அல்லது ‘or ‘ முன்பாக வந்தால் (மேலுள்ள எடுத்துக்காட்டில் son-in-law பிறகு), அதற்கு oxford comma என்று பெயர். நிறைய பத்திரிக்கை மற்றும் நாளிதழ்களில் இது தேவையில்லை என்று ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், இதை தவிர்த்தால் சில சமயம் தகவலை தவறாக தந்துவிடும்.

உதாரணம்: We had tea, cheese and crackers, and apples.

Cheese மற்றும் crackers ஒரே உணவு வகை என்பதை crackers-கு பின் உள்ள காற்புள்ளி உணர்த்துகிறது. இது போன்ற நிகழ்வுகளில் oxford dictionary தெளிவாக்கும்.

We had coffee, cheese and crackers, and grapes.

பொதுவாக, கற்பனை மற்றும் கற்பனை அல்லாத புத்தகங்களில் oxford comma பயன்படுத்தப்படுகிறது. oxford comma பயன்பாட்டை எழுத்தாளர் தீர்மானிக்கிறார். எப்படி இருந்தாலும் சரியான கருத்தை கூறுவதற்கு oxford comma அவசியம்.

 

விதி 2

காற்புள்ளியை உரிச்சொற்களுக்கு இடையில் பயன்படுத்தல். இரண்டு உரிச்சொற்களை இடம் மாற்றி எழுதினாலும் சரியாக இருக்கும் என்ற பட்சத்தில் காற்புள்ளியை பயன்படுத்தலாம்.

உதாரணம்: He is a weak, famished man.
Famishes, weak man 
என்றும் நம்மால் கூறமுடியும்.

உதாரணம்: I stayed at a cheap winter hotel.
நம்மால் winter cheap hotel என்று கூறமுடியாது. அதனால் காற்புள்ளி பயன்படுத்தமாட்டோம்.

காற்புள்ளி பயன்படுத்த மற்றொரு வழி ‘and’ என்ற வார்த்தையை இரண்டு உரிச்சொற்களுக்கு இடையே பயன்படுத்துவதாகும். அந்த உருவாக்கப்பட்ட வாக்கியம் அர்த்தமுள்ளதாக இருந்தால் காற்புள்ளி பயன்படுத்தலாம். மேலே குறிப்பிட்டுள்ள உதாரணங்களில் weak and famished man அர்த்தம் தருகிறது. ஆனால், cheap and winter hotel அர்த்தம் தரவில்லை.