Clauses and Phrases – சொற்றொடர்கள் மற்றும் உட்பிரிவுகள்

சொற்றொடர்கள் மற்றும் உட்பிரிவுகள்

சொற்றொடர்கள் மற்றும் உட்பிரிவுகள் ஒரு வாக்கியம் உருவாக்குதலில் அடிப்படை பகுதியாகும். இவை நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி மற்ற பகுதிகளை வைத்து சரியான அர்த்தத்தை உணர்த்தும். இவ்விரண்டிற்கும் நடுவில் உள்ள வித்தியாசத்தை புரிந்துக்கொண்டு சரியான இலக்கணம் கொண்டு வாக்கியங்களை அமைக்கலாம்.

What are clauses?

ஒரு வார்த்தைகளின் தொகுப்பு (முழு வாக்கியமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை) clause என்று கூறப்படுகிறது. அனைத்து clauses -இல் பொருள் (subject ) மற்றும் பயனிலை (predicate ) கொண்டிருக்கும். பயனிலை பொருள் என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கூறும். அனைத்து வார்த்தை தொகுப்பும் தனியாக நிற்காது. சிலது சார்ந்து அல்லது சிலது சாராமல் இருக்கும். சில உதாரணங்கள் இங்கே உள்ளது.

Example 1: He sang. (“He” is the subject here. “Sang” is both the verb and the predicate. இந்த வார்த்தை தொகுப்பில் இரண்டு வார்த்தைகள் மட்டுமே இருந்தாலும் தனியாக பார்த்தால் இவை அர்த்தம் உணர்த்தும்.)

Example 2: While he was singing, the audience was not able to take their eyes off him. இந்த இரண்டாவது உதாரணத்தில் இரண்டு வார்த்தை தொகுப்புகள் உள்ளன. The first “while he was singing” contains a subject (he) and a predicate (was singing), ஆனால் இதனால் தனியாக நிற்கமுடியாது. எனவே இது dependant clause ஆகும். The second clause, “the audience was not able to take their eyes off him,” contains a subject (the audience) and a predicate (take their eyes off her), இந்த வாக்கியத்தால் தனியாக நிற்கமுடியும், எனவே இது independent clause ஆகும்.

What are phrases?

phrase -இல் பொருள் மற்றும் வினையின் கூட்டு இருக்காது, அதனால் பயனிலை உருவாகாது. அதனுள் வினை அல்லது பெயர்ச்சொல் இருக்கலாம். ஆனால் subject அல்லது predicate இருக்காது. ஒரு சொற்றொடர் நாம் எழுதுவதற்கு மேலும் சில தகவல்களை கொடுக்கும். அதனால் தனியாக ஒரு வாக்கியமாய் நிற்க இயலாது. ஆனால் ஒரு சொற்றொடரால் clause -இற்கு நடுவில் அமைத்துக்கொள்ள முடியும். அந்த clause எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஒரு சொற்றொடர் clause -இன் உள்ளே அமைந்தால் அது பேச்சு பகுதியாக அமையும். கீழே சில உதாரணங்கள் உள்ளன.

Example 3: The play was held at the Auditorium. (“At the auditorium” is a prepositional phrase. It does not have a subject or predicate, so it would not be able to stand alone as a sentence)