முன்னிடைச்சொல்:

ஒரு வார்த்தையை இன்னொரு வார்த்தையுடன் இணைக்க முன்னிடைச்சொல் பயன்படுகிறது.  ‘Preposition’  என்றால் முன்னிடைச்சொல்  ‘pre’ என்றால் ‘முன்னால்’ ‘position’ என்றால் ‘இடம்’ என்று பொருள்.

கீழே உள்ள உதாரணங்கள் காணலாம். இதில் புத்தகம் மற்றும் ஆசிரியர் என்ற வார்த்தைகளை முன்னிடைச்சொற்களை பயன்படுத்தி வரும் வகியாகங்களை காணலாம்.

  • The book about the author
  • The book by the author
  • The book near the author
  • The book behind the author
  • The book under the author
பொதுவாக பயன்படுத்தப்படும் சில முன்னிடைச்சொற்க்கள் :
Preposition Tamil Meaning Preposition Tamil Meaning Preposition Tamil Meaning
about பற்றி between இடையில் despite ஆயினும்
above மேல் beyond அப்பால், தவிர down கீழே
across குறுக்கே by ஆல் out வெளியே
after பிறகு during பொழுது until வரையிலும்
against எதிராக except தவிர upon மேற்பட
along வழியாக, நெடுக்கில், அதனோடு for க்கு / க்காக over மேலே
among மத்தியில், நடுவே from இருந்து since இருந்து
around சுற்றிலும் in இல், உள்ளே through மூலம்
as போல inside உள்ளே till வரைக்கும்
at இல், இடத்தில் into இல், உள்நோக்கி to க்கு, வரை
before முன்னால் like போல, அதுமாதிரி towards நோக்கி
behind பின்னால் near அருகில் under அடியில், கீழ்
below அடியில் of இன், உடைய up மேலே
beneath அப்பால் on மேலே, இல் with உடன்
but ஆனால் outside வெளியே within உள்ளாக
beside அருகில் without இன்றி

.

 

Why should one learn grammar? – ஏன் ஒருவர் இலக்கணம் கற்றுக்கொள்ள வேண்டும்?

ஆங்கிலத்தில் பல குழப்பமான வார்த்தைகள், வாக்கியங்கள், விதிகள் உள்ளன. ஒரே நாளில் அத்தனை விதிகளையும் கற்றுக்கொள்ள இயலாது. அனைத்தையும் மனப்பாடம் செய்வது சாத்தியமே இல்லை. இந்த மொழியை நன்றாக கற்று தெரிந்தால் இலக்கணத்தை பற்றிய ஒரு எண்ணம் உருவாகும். இருந்தாலும், அவ்வப்போது தகவல்கள் தெரிந்துக்கொண்டு நம் பிழைகளை தெரிந்துக்கொண்டு அதை சரி செய்துக்கொள்வது முக்கியம் ஆகும்.

நம்மில் எத்தனை பேருக்கு antecedents என்றால் என்ன என்று தெரியும்? அவை பெயர்ச்சொற்களுக்கு பதிலாக வரும் பிரதிச்சொல் ஆகும். இப்பொழுதும் ‘I’ மற்றும் ‘me’ பயன்பாடு கடினமாக உள்ளதா? இந்த கேள்விகள் அனைத்தும் நீங்கள் முறையாக ஆங்கில இலக்கண விதிகளை கற்றுக்கொண்டால் தீர்ந்துவிடும். இதுபோல், ஆங்கில விதிமுறைகளை நன்றாக கற்றால் the objective case, commonly confused phrases, defining and non defining clauses, inverted sentences, irregular comparatives, superlatives, possessive pronouns போன்ற அனைத்திலும் சிறப்பாக தேர்ச்சி பெறலாம்.