Quotation Marks – மேற்கோள் குறி

சில வார்த்தைகளை கூறியதுபோலவே காட்ட மேற்கோள் குறிகள் பயன்படுகிறது. மற்றவர்கள் கூறிய அல்லது எழுதிய வார்த்தைகளை நாம் நகலெடுத்து எழுதியது போல் இல்லாமல் இருக்க இவ்வாறு எழுதப்படுகிறது. இதனால் இந்த வார்த்தைகளை சொந்தமாக கூறியவர்களுக்கு முழு மரியாதை அளிக்கப்படும்

விதி 1

கூறிய வார்த்தைகளை அச்சு அசலாக காட்ட மேற்கோள் குறிகள் பயன்படுத்தவும்.

சரியானது: “I wonder if you will stay,” he said.
தவறானது:  He said that he “wondered if I would stay.”
 (இங்கே மேற்கோள் குறிகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பேசியவர் கூறிய அதே வார்த்தைகளை சுட்டிக்காட்டவில்லை)

விதி 2

மேற்கோள் குறியுடன் வாக்கியம் ஆரம்பித்தால் முதல் எழுத்து எப்பொழுதும் பெரிய எழுத்தாக தான் இருக்கவேண்டும். அந்த வாக்கியம் நடுவில் தோன்றினாலும் பரவாயில்லை. ஒரு நல்ல உதாரணத்தை வைத்து இதை புரிந்துக்கொள்வோம்.

உதாரணம்: Martin said, “It is still very cold out there”

 Do not use capital letters if the sentence continues

உதாரணம்:  Martin said that it was “still very cold” and that “nothing has changed.”

Rule 3

நேரடி மேற்கோள் வாக்கியங்களில் குறுக்கே காற்புள்ளி பயன்படுத்தலாம்

உதாரணம்:
He said, “I really don’t want to know anything about it.”
“Why,” I asked, “are you not concerned?”

இந்த விதி ஒரு வார்த்தைக்கு பயன்படாது

உதாரணம்: He said, “Enough.”

 If the quotation comes before he asked, she said, they wrote, John insisted, or a similar attribution, end the quoted material with a comma, even if it is only one word.

உதாரணம்:
“I am so hungry,” he said.
“Enough,” he said.

ஒரு மேற்கோள் வாக்கியம் பொருளாக வாக்கியத்தில் அமைந்தால் அதற்கு காற்புள்ளி தேவையில்லை.

உதாரணம்:
Is “I forgot” all you can come up with?
Saying “Enough is enough” was not a right thing to do